ADVERTISEMENT
உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில், 2021-22ம் ஆண்டில், 8.88 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கும், உபரி நீர் திறப்பு, 8.69 டி.எம்.சி., நீர் என, 17.57 டி.எம்.சி., நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 15,936 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவிலுள்ள, 13,451 ஏக்கர் நிலங்கள் என, 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
புதிய ஆயக்கட்டு பாசனத்தில், பிரதான கால்வாய் வழியாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்கள் என, மொத்தம், 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.1958ம் ஆண்டு, 4 டி.எம்.சி., கொள்ளளவுடன் கட்டப்பட்ட அணை, தென்மேற்கு, வட கிழக்கு மற்றும் கோடை மழை என, ஆண்டுக்கு, 10 டி.எம்.சி., நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் மே வரை பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது.வழக்கமாக, அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஜூன், ஜூலை மாதங்களிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, ஆக., மாதமும் நீர் திறக்கப்படும்.கடந்தாண்டு பருவ மழைகள் காரணமாக, நீர்வரத்து அதிகரித்ததால், அணை கட்டப்பட்டதிலிருந்து, முதல் முறையாக, மே 16ல், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு, செப்., 28 வரை நீர் வழங்கப்பட்டது.கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்களுக்கு, ஜூலை 12 முதல் டிச., 24 வரையும், புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள, 10 பழைய வாய்க்கால்களுக்கு, செப்., 20 முதல் 2022 பிப்., 2 வரையும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் சாகுபடிக்கும், பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு கூடுதல் நீர் என, 8 முறை பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் வரை, பாசனத்திற்கு, 8.88 டி.எம்.சி., நீர் வழங்கப்பட்டுள்ளது.
உபரி நீர் திறப்பு
கடந்த, 2021-21ம் ஆண்டில், ஜன., 13ல் அணை நிரம்பி, வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, தென்மேற்கு, வட கிழக்கு பருவ மழைகள் காரணமாக, 4 முறை அணை நிரம்பியதோடு, நான்கு மாதத்திற்கும் மேலாக, மொத்தமுள்ள, 90 அடியில், 85 அடி வரை நீர் இருப்பு இருந்தது.கடந்தாண்டு, மே 16 முதல், நேற்று முன்தினம் (2022 மே 15) வரை, ஒரு ஆண்டில் அணையிலிருந்து, உபரியாக, 8.69 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.அணை நிரம்பி, பல நாட்கள், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டதால், பாசன நிலங்களுக்கு மட்டுமின்றி, இரு மாவட்டத்திலும், வழியோரத்திலுள்ள, 56க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்கப்பட்டது.
இதனால், பல ஆண்டுகளுக்கு பின், முழுமையாக அமராவதி பாசனத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதோடு, குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பியதால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்பட்டது.கடந்தாண்டு, இயல்பை விட கூடுதலாக கிடைத்த நீரால், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 56.83 அடி நீர்மட்டம் கோடை காலத்திலும் இருப்பு இருந்தது.நடப்பாண்டும், பருவ மழைகள் திருப்தியாக கிடைக்கும் என்ற எதிர்பார்பில், தற்போதும் முன்னதாகவே, பாசன ஆண்டு துவங்கியுள்ளது.

ஓராண்டு சாதனையில் மற்றுமொரு வைரக்கல்.