Load Image
dinamalar telegram
Advertisement

ராகுல் பேச்சுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு: காங்., கட்சி மேலும் தேயும் அபாயம் !

புதுடில்லி : கட்சிக்கு புத்துயிர் கொடுக்க நடத்தப்பட்ட சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறிய கருத்துக்கு, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், 2024 லோக்சபா தேர்தலில் அக்கட்சி மேலும் தேயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடர் தேர்தல் தோல்விகளுடன், கோஷ்டி மோதல், அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு, மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு, இளம் தலைவர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவுவது என, பல சிக்கல்களால் காங்கிரஸ் கட்சி தள்ளாடி வருகிறது.Latest Tamil News

தோல்விசமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பஞ்சாபில் ஆட்சியை இழந்ததுடன், மற்ற மாநிலங்களில் படு தோல்வியை சந்தித்தது.இதையடுத்து, கட்சித் தலைமை குறித்தும், கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்தும் பல்வேறு தலைவர்கள் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினர். இதன் எதிரொலியாக, கட்சியில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக ஆலோசிக்க, 430 மூத்த தலைவர்கள் பங்கேற்ற சிந்தனையாளர்கள் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்தது.

Latest Tamil Newsமூன்று நாள் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியினருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் முன்னாள் தலைவர் ராகுல் பேசினார். ஆனால், அவருடைய பேச்சு, தற்போது கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளது. அவருடைய பேச்சுக்கு, கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட பல பிராந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளன.

'வரும், 2024 லோக்சபா தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கும். அதனால், சிறந்த கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தம் உடைய காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வுக்கு கடும் போட்டியை தர முடியும். எவ்வித கொள்கைகளும் இல்லாத பிராந்திய கட்சிகளால், தனியாக பா.ஜ.,வை எதிர்க்க முடியாது' என ராகுல் பேசியிருந்தார்.

கண்டனம்அவருடைய இந்த பேச்சு தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு ஆகியோர், ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்த, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தான், தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு எதிராக சரியான தேர்வாக இருப்பார் என, இந்த தலைவர்கள் கூறியுள்ளனர்.


அதேபோல், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவடைந்து வருகிறார். இந்த மாநிலங்களில் காங்கிரசை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் ஈடுபட்டுஉள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில் ராகுல் பேசியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ள கட்சிகள், காங்கிரசை தேவையில்லாத சுமையாகவே கருதி வருகின்றன. கடந்தாண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த சட்ட சபை தேர்தலின்போது, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை.


தமிழகத்தில் தி.மு.க., ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மஹாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.

இந்நிலையில், ராகுலின் பேச்சு, இந்தக் கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. இதனால், அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடனான கூட்டணியை இந்தக் கட்சிகள் தொடருமா என்பது சந்தேகமே.


ஹிந்திக்கு முக்கியத்துவம்

உதய்பூரில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஹிந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர் சிதம்பரம் ஆங்கிலத்தில் எழுதி தந்ததை ஹிந்தியில் மொழிபெயர்த்து, அஜய் மாகன் வெளியிட்டார். இது கட்சி, எம்.பி.,க்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. கட்சியின், 53 லோக்சபா எம்.பி.,க் களில், பாதிக்கும் மேற்பட்டோர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியாமல் குழம்பினர்.மேலும், ஹிந்தியை முன்னிலைப்படுத்தும் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஹிந்தியில் மட்டுமே பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (9)

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  பாவம்... பட்டாயா ஜாதகம்... வாயத்தொறந்தா ஆட்சேபணைகள் குவியுது.....

 • jayvee - chennai,இந்தியா

  ஒன்று தெளிவாக தெரிகிறது ..கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பது தீவிர வாதம் சார்ந்த BJP எதிர்ப்பை .. காங்கிரஸிடம் இருப்பது தேசிய வாத எதிர்ப்புக்கொண்ட BJP எதிர்ப்பு மட்டுமே. இரண்டுமே ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்

 • Mohan - COIMBATORE,இந்தியா

  காங்கிரசில் முன்னாடி பல தலைவர்கள் இருந்தனர் இப்போது எல்லாம் தருதலைகள் தான் உள்ளனர்

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  சரத் பவாரையும், மம்தாவையும் பேசவச்சிப் பாருங்க...பாஜகவுக்கு எதிராக கூட்டணியே உதயமாகாது.....

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  எங்கே போனார்கள் திமுக விசிக கம்யூனிஸ்ட் லாசு அருணன் போன்றவர்கள்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்