Load Image
dinamalar telegram
Advertisement

தொழில்துறையினர் குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா? பறக்கும் பஞ்சு, நுால் விலை!

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:நுால், பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூரில் பின்னலாடை துறையினர் 48 மணி நேர உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.ஜவுளி உற்பத்தி துறையின் பிரதான மூலப்பொருட்களான பருத்தி பஞ்சு மற்றும் நுால் விலை விண்ணை நோக்கி பறக்கிறது. கடந்த ஆண்டுகளில் கேண்டி 50 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு, தற்போது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
வரி நீங்கலாக ஒருகிலோ ஒசைரி நுால் விலை, கிலோ 455 ரூபாயை தொட்டுவிட்டது.இதனால், உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, புதிய ஆர்டரை கைப்பற்ற முடியாதது, ஏற்கனவே உள்ள ஆர்டர்களுக்கு ஆடை தயாரிக்க முடியாதது என, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் சந்தித்துவரும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.இனியும் தாங்கமுடியாது என்கிற சூழலில், ஒட்டுமொத்த பின்னலாடை துறையினரும் ஓரணியில் திரண்டு, நேற்றும், இன்றும் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்திவருகின்றனர். ஆடை உற்பத்தி அமைப்பினருக்கு ஆதரவாக, ஜாப்ஒர்க் நிறுவனங்கள், துணை பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. இப்போராட்டத்தால், ரூ.360 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ளது.

அவிநாசியிலும்...
அவிநாசி சுற்றுவட்டார பகுதி, சேவூரை மையமாக வைத்து முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், தத்தனுார், ஆலத்துார், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட 'ஜாப் ஒர்க்' யூனிட்கள் செயல்படுகின்றன.இத்தொழில் சார்ந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பின்னலாடை நிறுவனத்தினருக்கு ஆதரவாக இவர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    பஞ்சு உழவர்களுக்கு பணம் கிடைப்பதை இந்த நூன் உற்பத்தியாளர்கள் ஏன் தடுக்க நினைக்கிறார்கள்?

  • duruvasar - indraprastham,இந்தியா

    நடவடிக்கை எடுக்க சொல்லி ஸ்டாலின் மோடிக்கு உடனடியாக கடிதம் எழுதிவிட்டாரே. இது என்னங்க உக்ரையினில் தவித்த தமிழக மாணவர்களை 3 கோடி ரூபாய் செலவில் மீட்டு கொண்டு வதைப் போலவோ, அல்லது 5 கோடி தமிழர்களுக்கு இறக்குமதி செய்து தடுப்பு ஊசியை போட்டது மாதிரியோ செய்ய முடியாதுங்க. ஸ்டாலினுக்கு இதை செய்யலாமென்ற துடிப்பு இருந்தாலும் டாஸ்மாக்கிலிருந்து அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லையே. முதல்வருக்கு மன உளைச்சலை உருவவாக்காதீர்கள்.

  • அப்புசாமி -

    எந்த அரசு செவி சாய்க்கணும்னு தெரியலை. ஒன்றிய அரச? விடியா மூஞ்சி அரச? இதில் எட்டு புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்னு ஒரு மத்திய அமைச்சர் சொல்லியிருந்தாரு.

Advertisement