டில்லியில், மாநில ஆட்சியில் ஆம்ஆத்மி கட்சியும், உள்ளாட்சியில் பா.ஜ.,வும் இருந்து வருவதால், அடிக்கடி இந்த இரு கட்சிகளுக்கு இடையே மோதல்போக்கு நிலவுகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற டில்லி மாநகராட்சி உத்தரவிட்டதுடன், பல பகுதிகளில் புல்டோசர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

டில்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ., அதிகாரத்தில் இருந்தது. இந்த 15 ஆண்டுகாலத்தில் பா.ஜ., என்ன செய்தது? தேர்தல் நடக்கட்டும், புதிய மாநகராட்சி நிர்வாகம் ஒரு முடிவை எடுக்கட்டும். ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்ப்போம் என்று டில்லிவாசிகளுக்கு உறுதி அளிக்கிறோம்; அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவோம். டில்லியில் சேரிகளை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கபடம் நிறைந்த கபடதாரி. இன்னும் இவை மக்கள் நம்பினால், பாவம் மக்கள் தான். என்ன பேசுகிறோம் என்றே இவருக்கே தெரியாது. துஷ்டன், தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரு மூடன்.