Load Image
dinamalar telegram
Advertisement

உயரப்போகுது பேருந்து கட்டணம்: பட்டியல் தயார் என்கிறார் அமைச்சர்

Tamil News
ADVERTISEMENT
பெரம்பலூர்: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே புதிய வழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு விட்டது. ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப அதிகாரிகள் கட்டனத்தை நிர்ணயித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை.
Latest Tamil News
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. போக்குவரத்து கழகம் 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனில் உள்ளது. மாநில உரிமைகளில் எந்தவித சமரசமும் இன்றி முதல்வர் செயல்படுகிறார். ஆதினங்கள் கேட்டுக்கொண்டதாலேயே பட்டனபிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருநங்கைகளால் பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிவசங்கர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (37)

  • Soumya - Trichy,இந்தியா

    ஹாஹாஹா கொத்தடிமைங்களுக்கு அடிக்குமேல் அடி கைதட்டுங்கடா விடியல் வாழ்கன்னு

  • katharika viyabari - coimbatore,இந்தியா

    என்னது பேருந்து கட்டணம் உயரப்போகுதா?. இன்னைக்கே ஒரு அம்பது தடவை பஸ்ல போய் பார்த்துட்டு வந்துடனும்.

  • r ravichandran - chennai,இந்தியா

    போக்குவரத்து துறை இதுவரை லாபம் ஈட்டியது என்று கேள்வி பட்டதே இல்லை, 48500 கோடி நஸ்டம் என்று சொல்லுகின்றன. தனியார் போக்குரத்து நிறுவனங்கள் ஒரு பேருந்தில் ஆரம்பித்து பல பேருந்து என்று வளர்ச்சி பெறுகின்றன. இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அரசு போக்குவரத்து கழக லட்சணம் இவ்வளவு தான் என்று. ஊழல், நிர்வாக திறமையின்மை, அளவுக்கு அதிகமான இலவசம், வருவாயை விட அதிக ஊதியம், தொழில் சங்கங்கள் அடிக்கும் லூட்டி , இவை தான் நஸ்டம் அடைய முக்கிய காரணங்கள். தொழில் செய்வது அரசின் வேலை இல்லை. தனியார் மயம் தான் இதற்கு தீர்வு.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஏறப்போகுது பேருந்து கட்டணம். ஏறாதது பேருந்துகளில் வசதி.

  • kunar - ,

    விடியல் ஆட்சி சூப்பர் மக்களுக்கு வலிக்காமல் உலக்கை கொண்டு அடிக்கும் விடியல் அரசு

Advertisement