Load Image
Advertisement

அரசியலில் யாரும் புனிதர் அல்ல: நாங்கள் சங்கர மடமா நடத்துகிறோம்: அமைச்சர் நேரு சர்ச்சை

 அரசியலில் யாரும் புனிதர் அல்ல: நாங்கள் சங்கர மடமா நடத்துகிறோம்: அமைச்சர் நேரு சர்ச்சை
ADVERTISEMENT

திருச்சி: அரசியலில் யாரும் புனிதர் அல்ல எனவும், புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசியதாவது: ஒரு ஆண்டில், 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். நான் அப்படி சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால், அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும். உங்களுடைய கட்சி பிரச்னையை தீர்த்து விட்டு, எங்களிடம் வந்து பேசுங்கள். முடிந்தால் வழக்குப் போட்டு, எங்களை உள்ளே தள்ளுங்கள் என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டுள்ளனர்.

Latest Tamil News
அதை எல்லாம் கடந்து தான் அமைச்சராகி உள்ளேன். நேரு புனிதர் அல்ல, என்று திருவெறும்பூரில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசி உள்ளனர். புனிதராக இருந்தால், வாயில் வெண்ணெய் தடவி படுக்கப் போட்டு இருப்பீர்கள். புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்? சென்னைக்கு அடுத்த நிலைக்கு திருச்சி மாவட்டத்தை உயர்த்துவோம். நாங்கள், நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (72)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    கட்டுஸ் அப்பவே சொன்னாரு, தீயமுக கம்பெனி ஒன்னும் சங்கர மடம் இல்லை வர்றவன் போறவன் எல்லாம் முதலாளி ஆகறதுக்கு னு, தீயமுக கம்பெனி என்றும் கட்டுமர குடும்பத்துக்கே சொந்தம், இவரு முதல் அடிமை மத்தவங்க கடைசி அடிமை, அவ்வளவு தான் வித்தியாசம்

  • r ravichandran - chennai,இந்தியா

    எப்படியோ சங்கரமடம் புனிதமானது என்று ஒப்பு கொண்டுவிட்டார். நேர்மையான காமராஜர் அமைச்சர் அவையா இப்போது நடக்கிறது.

  • Ganesh -

    சரிதான் அரசியல் கட்சிகள் சங்கரமடம் நடத்துவதில்லை.மடம் என்றால் யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம்.தர்ம காரியங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.மகன்களுக்கு இடமில்லை தகுதிகள் முக்கியம் ஆனால் அரசியல் அப்படி இல்லை.எனவே இனிமேல் மடாதிபதியாக ஒரு தலித்தை ஆக்க முடியுமா என்று கேட்காதீர்கள்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அரசியலில் யாரும் புனிதர் அல்ல. ஆம், புனிதர் யாரும் அரசியலுக்கு வருவதும் இல்லை. பொய், புரட்டு செய்பவர்கள்தான் அரசியலுக்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிகம் விரும்புவது திமுகவை மட்டும்தான்.

  • Rajasekaran - Chennai,இந்தியா

    இவர்கள் எப்போதும் சங்கர மடத்தைப்பற்றியே நினைத்துக் கொண்டு போகும் வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். அடடா , என்ன ஒரு பக்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்