Load Image
dinamalar telegram
Advertisement

பவுர்ணமியில் வேட்பாளரை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: மாஜி ஜெயக்குமார் கிண்டல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்காலம் - திமுக ஆட்சி கற்காலம். தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர். நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுப்போது, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றை நிறைவேற்றியுள்ளதா?

மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். இந்த ஆட்சி நம்பிக்கை மோசடி செய்ததாக மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் இதெல்லாம் வெளிப்படும். பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியின் மதிப்பீடு ஆனது, நாங்கள் (அதிமுக) ஹீரோவாகவும், இவர்கள் (திமுக) ஜீரோவாகவும் இருக்கின்றனர்.
Latest Tamil Newsஅம்மா உணவகங்களை படிப்படியாக குறைத்து கருணாநிதி பெயரில் உணவகம் திறக்க முயற்சிக்கின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என அனைத்தையும் முடித்துள்ளனர். இப்படியான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய நல்ல திட்டங்களை எல்லாம் முடித்துவைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (61)

  • John Miller - Hamilton,பெர்முடா

    nnnn

  • Tamilan - NA,இந்தியா

    விஞ்சானத்தில், பஞ்சாங்கங்கள் சாஸ்த்திர சம்பிரதாயங்களும் ஒரு அங்கம் . விஞ்சானத்தில் உள்ள பகுத்தறிவுவாதிகளால் இதையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிடமுடியவில்லை . கற்கால தமிழர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும் பகுத்தறிவு (பறைசாற்றிக்கொண்ட) தமிழர்கள் மட்டுமே இனியும் சாஸ்த்திர சம்பிரதாயங்கலை ஒதுக்கி வைக்கலாம் என்று கனவு மட்டுமே காண்கிறார்கள் .

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    பாஸ்,விடியலம்மா கோயிலுக்கு போறது ஹிந்து அடிமைகள் ஓட்டு வாங்க மட்டுமே, ஆக அது உண்மை யில்லை என கர்த்தரின் சீடர் கடிதம்

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இன்னமும் உங்க கட்சில முக்கிகிட்டு இருங்கீகளே அது என்னது அறிவு ஜீவிகளா ?

    • HSR - MUMBAI,இந்தியா

      அவரு கேட்டதுக்கு இது பதில் இல்லையே

  • Ramamurthy N - Chennai,இந்தியா

    EPS மற்றும் OPS இவருடைய பெயரை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை? என்ற வருத்தம் இவருக்கு உள்ளது என்பதனை மறைமுகமாக சொல்லுவது போல் தெரிகிறது. இனி தேய் பிறை தான்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்