நூல்விலை ஏற்றம்: ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக்; தமிழகத்தில் ரூ.500 கோடி உற்பத்தி முடக்கம்
திருப்பூர்: பஞ்சு மற்றும் நூல் விலையை குறைக்க வேண்டும் , மூலப்பொருள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், ஜவுளியை யூக வணிகத்தில் இருந்து நீக்கி அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் விசைத்தறி , ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர்.
இதனால் திருப்பூர், பல்லடம் , ஈரோடு கரூர், சேலம், கோவை , ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 500 கோடிக்கும் மேல் ஆடை உற்பத்தி முடக்கம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. பஞ்சு நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி யாளர்கள் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர். பின்னலாடை துறை சார்ந்த 30 க்கும் மேற்பட்ட சங்கங்கள் கரம்கோர்த்து இப்போராட்டத்தை நடத்துகின்றன.
உள்நாட்டு ஏற்றுமதி ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் , நிட்டிங் டையிங், பிளீச்சிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, ரோட்டரி பிரின்டிங், பவர்டேபிள், செக்கிங், அயர்னிங், பேக்கிங் உள்பட அனைத்து வகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள். நூல், துணி, சாயம் வர்த்தகம்; எலாஸ்டிக், அட்பெட்டி, பாலிபேக் என துணை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இன்று முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
வழக்கமாக காலை 8:30 மணி முதலே உற்பத்தியை துவக்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஸ்டிரைக் காரணமாக, தொழிலாளர் வருகையின்றி, இயந்திர ஓசையின்றி வெறிச்சோடியுள்ளன.
இன்று, நாளை இரண்டுநாள் போராட்டத்தால், திருப்பூரில் மட்டும் ரூ. 200 கோடி ஏற்றுமதி; 160 கோடிக்கு உள்ளாட்டுக்கான ஆடை உற்பத்தி என, ரூ.360 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்குகிறது.
விசைத்தறி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் பஞ்சு பதுக்கல் தடுக்கப்பட்டு, நூல் மற்றும் உற்பத்தி பொருட்கள் சீரான விலைக்கு கிடைக்கும் என உற்பத்தியாளர்கள் சொல்கின்றனர்.

திருப்பூரில் கடும் பாதிப்பு

வாசகர் கருத்து (3)
இந்த பிரச்சினையை நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே நிற்க்க முடியும் என்பது நம்பிக்கை
ஏ”ற்கெனவே மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நீக்கிய போது... நாங்கள் தான் அதைச் செய்தோம்..ன்னு சொல்லி பீத்திக்கிட்டு பாராட்டு வாங்கிய மன நலம் குன்றிய அரசு இப்போது என்ன செய்யப் போகிறது??? குன்றிய அரசுக்குப் பாராட்டு தெரிவித்த தொழிலதிபர்கள் இப்போது ஏன் ம்வுனம்??? குன்றியத் தலைவரிடம் சென்று முறையிடலாமே.....???
ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கை நியாயமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் கோரிக்கையில் சம்பந்தப்பட்ட துறையினர் தலையிட்டு, அவர்களின் கோரிக்கையை விரைவில் நிவர்த்திசெய்து அவர்களுக்கு உதவிசெய்திடவேண்டும்.