Load Image
dinamalar telegram
Advertisement

திருமண விழாவில் சசிகலா சொன்ன குரங்கு கதை: தினகரனுக்கா, பழனிசாமிக்கா என விவாதம்

Tamil News
ADVERTISEMENT
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா சொன்ன குரங்கு கதை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தன் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவில் சசிகலா பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க. உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. கட்சியை காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்க தகுந்த நேரம் வந்து விட்டது.

மாங்கொட்டையை ஊன்றி மரமாக வளர செய்தால் இஷ்டத்திற்கு மாம்பழங்களை பறித்துச் சாப்பிடலாம் என ஒரு குரங்கு மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது.சிறிது காலமாகியும் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவசரம். அந்த அவசர புத்தி குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை.Latest Tamil News
ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை துார எறிந்து விட்டு வருத்தப்பட்டது. குரங்கின் அவசர புத்திதான் அதற்கு காரணம்.விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் சில காலம் பொறுமை காக்க வேண்டும்.அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் நம் இயக்கம் வலிமை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த குரங்கு கதையை தினகரனுக்காக தான் கூறினார் என ஒரு தரப்பினரும் பழனிசாமிக்காக கூறினார் என மற்றொரு தரப்பினரும் பெரும் விவாதமே நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (20)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இனிமேல் அரசியல் ஆசை வேண்டாமே. கோடி கணக்கில் பணம் சேர்த்தாச்சு. அப்புறம் என்ன ? வந்தாலும் மக்கள் வாகு அளிக்க மாட்டார்கள். அதிமுக அழிந்து விடும் உங்களை சேர்த்தால்.

 • DVRR - Kolkata,இந்தியா

  யாரும் தன்னை பற்றி இவ்வளவு வெட்ட வெளிச்சமாக சொல்லமாட்டார்கள்???ஆகவே சதிகாரியை நிச்சயம் இதற்காக பாராட்டியே தீரவேண்டும்???குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை.????இதைத்தானே குழந்தாய் நீ செய்து பார்கின்றாய் அதிமுக உன்னை ஏற்றுக்கொண்டு விடுமா என்று

 • Rengaraj - Madurai,இந்தியா

  சின்னம்மா...... பள்ளியில பசங்க வகுப்பிலே கதை சொன்ன நல்லா கேட்பாங்க ஆனா படிக்க சொன்ன படிக்க மாட்டாங்க. மார்க்கும் வராது. அதே போன்று உங்கள் கதை சொல்லும் திறன் மூலம் கதை கேட்க கூட்டம் வரும். பொழுதும் அவர்களுக்கு போகும். கூடுகிற கூட்டத்தை பார்த்து நீங்களும் செலவு செய்வீர்கள். அவர்களுக்கு செலவுக்கு பணமும் கிடைக்கும். ஆனால் வோட்டுக்களாக மாறாது. இவங்களை நம்பாதீங்க போதும் விட்டுருங்க ப்ளீஸ்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  சின்னாத்தா அந்தளவுக்கெல்லாம் யோசிக்க மாட்டாரு. அவரு சொன்னது நிஜமான குரங்கு கதை. தஞ்சை ஜில்லாவில் மாந்தோப்புகளும் அதிகம் குரங்குத்தொல்லையும் அதிகம் தூங்க போகும் முன் ரெண்டு வயசு குழந்தைக்கு சொல்லும் கதை. எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது என் பாட்டி சொன்ன கதை என் மகனுக்கு ரெண்டு வயசு இருக்கும் போது எங்கம்மா சொன்ன கதை அதைத்தான் சின்னாத்தா சொல்லிருக்கு.

 • Anand - chennai,இந்தியா

  தனக்கு தானே சொல்லிக்கொள்கிறார்......

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்