அவருக்கு அவரே ஆறுதல்!
'பதவியில் அமர்ந்து ஒன்பது மாதங்கள் தான் ஆகின்றன; அதற்குள் குழி பறிக்கின்றனரே...' என்று பதறுகிறார், கர்நாடக முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை.கர்நாடக மக்களிடையே செல்வாக்கு பெற்றவரான எடியூரப்பா, இதற்கு முன் முதல்வராக இருந்தார். வயது, 70க்கு மேலாகி விட்டதாலும், சில ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவும், அவரை பதவியிலிருந்து துாக்கி அடித்தது, பா.ஜ., மேலிடம்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கினாலும், அதை சாமர்த்தியமாக சமாளித்து நாட்களை கடத்தி வருகிறார், பசவராஜ் பொம்மை.இந்த நேரத்தில் தான், கர்நாடகாவின் முதல்வரை மீண்டும் மாற்ற, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, சமீபத்தில் கர்நாடகாவுக்கு வந்து சென்றது, இந்த வதந்தியை மேலும்
பசவராஜ் பொம்மையோ, 'அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசிப்பதற்காகவே அமித் ஷா வந்தார். ஆனால், அதை வைத்து கதை கட்டி விட்டனர்...' என பொறுமுகிறார்.கர்நாடகாவில் உள்ள பொம்மையின் அதிருப்தியாளர்களோ, 'அவருக்கு அவரே ஆறுதல்
கூறுகிறார்; பாவம்...' என கிண்டலடிக்கின்றனர்.
''கொடுத்தவன் பறித்துக்கொண்டாண்டி ''ன்னு பாடவேண்டியதுதான்