ADVERTISEMENT
'நீங்க வேற ஏன்யா படுத்துறீங்க!'
தமிழக கவர்னர் ரவி, சமீபத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பை விமர்சித்து பேசியதை கண்டித்து, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில், சில குட்டி அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்க, அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
எனினும் முன்னெச்சரிக்கையாக, ஏ.டி.எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ் தலைமையில், 25க்கும் மேற்பட்ட போலீசார், காலை 10:00 மணி முதல் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர்.அப்போது, சில அமைப்புகளின் நிர்வாகிகள், 10 பேர் மட்டும் வந்தனர். அவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தாமல், எதிரே உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ, வடை சாப்பிடும் பணியில் மும்முரம் காட்டினர்.
கடுப்பான போலீசார், 'அடிக்கிற வெயில்ல நீங்க வேற ஏன்யா படுத்துறீங்க...' என, புலம்பியவாறே நடையை கட்டினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!