Load Image
dinamalar telegram
Advertisement

கல்குவாரி விபத்து: ஆய்வுக்கு வந்த அமைச்சர், சபாநாயகர் கார்களை பொதுமக்கள் முற்றுகை

Tamil News
ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை சரிந்ததில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் காரை பொதுமக்கள் மறித்து முற்றுகையிட்ட சம்பவம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது. இதில், கற்கள் ஏற்றி சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கி கொண்டன.Latest Tamil News
இதில், டிரைவர்கள், தொழிலாளர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.குவாரி உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர்.
Latest Tamil News

அமைச்சர் கார் முற்றுகை


நெல் வெளியில் பாறை சரிந்து 4 பேர் சிக்கிய அடை மிதிப்பான் குளம் கல்குவாரி பார்வையிட வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை சுற்று வட்டார கிராம மக்கள் முற்றுகையிட்டு செய்தனர். நடந்த சம்பவத்திற்கு இன்று மாலையில் வந்து அரசியல் செய்கிறீர்களா என ஆவேசத்துடன் கேட்டனர். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் விதிமுறை மீறிய குவாரி உரிமையாளர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து கெரோ செய்தனர்.பொதுமக்கள் வழிமறித்ததால் வேறு வழியின்றி காரை விட்டு இறங்கிய அமைச்சரும், சபாநாயகரும் சம்பவ இடத்திற்கு நடந்தே சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (14)

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    இந்த ஒரு வருடத்தில் மரண ஓலமும் சோக செய்திகளும் தான் தினம் தினம் ....ஒரு விடியலும் பொது மக்களுக்கு இல்லை இது நூறு சதவிகித உண்மை

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    ஒரு கோடி யாருக்கு என்பது தான் இப்போது வினா ..அப்பாவிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • ராஜா -

    அடிச்சு மட்டும் விரட்டீராதீங்க மக்களே...

  • அப்புசாமி -

    அமைச்சர்களும், சபாநாயகரும் போக வேண்டிய அவசியமே இல்லை. கல்குவாரி ஓனரிடமிருந்து காசைப் பிடுங்கி குடுக்கணும். இதுமாதிரி ஆச்சுன்னா மட்டும் ஜாதி, சனம், ஊரெல்லாம் எங்கேருந்தோ கூட்டமா வந்துரும். இதுமாதிரி வேலை செய்வதற்கு முன் லைஃப் இன்சூரன்ஸ் எடுத்திருக்கணும்டா... அது கூடபோறாது. வீட்டை விட்டு வெளில கால் வெச்சாலே இன்சூரன்ஸ் எடுத்திட்டுதான் போகணும்.

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    நாங்க அரேஞ்சு பண்ணுன காசுக்கும் குவார்ட்டருக்கும் ஒட்டு போட்ட பயலுவளுக்கு இம்புட்டு ரோஷமா என்று இவர்கள் மனதிற்குள் நினைத்திருப்பார்கள் ..... வாயால் கேட்க முடியாத நிலைமை ....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்