ADVERTISEMENT
சென்னை: கோவிட் காலத்தில், முறைகேடாக இபாஸ் பெற்ற பயன்படுத்தியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற கோவிட் விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கோவிட் பரவலின் போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது கோவிட் பரப்பியதாக பல லட்சம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது கோவிட் கட்டுக்குள் வந்ததையடுத்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்., மாதம் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கோவிட் காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் செய்யப்பட்டது. வழக்குகள் பொது மக்களின் நலன் கருதி வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை, செயல்படுத்தி, வழக்குகளை வாபஸ் பெறும்டி, போலீசாருக்கு உள்துறை செயலர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு , மண்டல ஐஜி.,க்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பி.,க்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், முதல்வர் உத்தரவுப்படி கோவிட் காலத்தில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றஙகளுக்காக 2019-20 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இபாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற கோவிட் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை வரும் 17 ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனக்கூறியுள்ளார்.

அப்படியே கஷ்டப்பட்டு வழக்கு பதிஞ்ச போலீசார் அனைவருக்கும் பூசிக்கொள்ள ஒரு பாக்கெட் கரித்தூளும் வழங்கபட்டதுன்னு பேசிக்கறாங்க.