dinamalar telegram
Advertisement

அரசியல் சவால் இல்லை: திரிபுரா முதல்வர்

Share
Tamil News
அகர்தலா: திரிபுரா முதல்வராக மாணிக் ஷாகா பதவியேற்று கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், மாநிலத்தில், எங்களுக்கு எந்த அரசியல் சவாலும் இல்லை என்றார்.

திரிபுரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கட்சியை பலப்படுத்தி தேர்தலை சந்திக்கும் விதமாக முதல்வராக இருந்த பிப்லப் தேப் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து அகர்தலாவில் நடந்த விழாவில், மாணிக் சாஹா முதல்வராக இன்று (மே 15) பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் மாணிக் சாஹா கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வின் கொள்கைப்படி வளர்ச்சிப்பாதையில் மாநிலத்தை கொண்டு செல்வோம். மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுடன், சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்போம். எங்களுக்கு அரசியல் ரீதியாக சவால் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Samathuvan - chennai,இந்தியா

    ....

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    ……..

  • Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா

    அரசியல்'வியாதிகளை' சமாளிப்பதுதான் மக்களுக்கு பெரிய சவால்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்