களை செடிகளால் உருவான யானை
கூடலுார் : கூடலுார் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று முன்தினம் துவங்கியது. அதில், வனப்பகுதியில் வளரும் களைச்செடிகள் எனப்படும், உண்ணிச்செடிகளை பயன்படுத்தி உருவாக்கி உள்ள, குட்டியுடன் கூடிய யானை அனைவரையும் கவர்ந்து வருகிறது.குறிப் பாக, குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மறைவு காரணமாக, நேற்று, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், நிகழ்ச்சிகளுக்கு தயாராக வந்திருந்த பள்ளி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடலுார் ஆர்.டி.ஓ., சரவணன் கூறுகையில், ''அரசு உத்தரவுப்படி கலை நிகழ்ச்சிகள் இன்று (நேற்று) ஒரு நாள் ரத்து செய்யபட்டது. நாளை (இன்று) கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கண்காட்சியை நீடிப்பது குறித்து அதிகாரிகள் உத்தரவுபடி முடிவு செய்யப்படும்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!