லாரியில் டிரைவர் சடலம்
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உருமாண்டாம்பாளையத்தில் தனியார் ஐ.டி., நிறுவனத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், ஆண் சடலம் கிடந்தது.துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த கண்ணன், 43; டிரைவர் என தெரியவந்தது. இவர், கேரளா சென்று விட்டு நேற்றுமுன்தினம் துடியலூர் அருகே உள்ள உருமாண்டாம்பாளையம் ஐ.டி., நிறுவனத்தின் முன் லாரியை நிறுத்தி, அதிலேயே தூங்கியுள்ளார். போலீசார் டிரைவர் கண்ணன் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!