dinamalar telegram
Advertisement

மதமாற்றம் தடுக்கப்பட வேண்டும் : வி.எச்.பி., முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

Share
Tamil News



உடுமலை : ''பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே பூஜாரிகள் இருந்துள்ளனர்; ஹிந்து மதம் சிறப்பான மதம்; மதமாற்றத்தை தடுக்க வேண்டும்,'' என கிராம கோவில் பூஜாரிகள் மாநாட்டில், முன்னாள் அகில உலக தலைவர் வேதாந்தம் பேசினார்.


திருப்பூர் மாவட்டம், உடுமலையில், தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத்- கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் பேசியதாவது :
தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே, பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியமாக பூஜாரிகள் இருந்துள்ளனர். அதற்கான சான்றுகளாக பழங்கால ஆவணங்கள் உள்ளன. மக்களுக்கும், இறைவனுக்கும் பாலமாக உள்ளவர்கள் பூஜாரிகள்.உலகிலேயே, நல்ல நேரம், முகூர்த்தம் என நல்ல விசேஷங்கள் முதல் இறப்பு வரை அனைத்திற்கும் நேரம் பார்த்து செய்யும் மதம் ஹிந்து மதம் ஒன்றே.

நல்ல பழக்கவழக்கங்கள், நேரம் தவறாமை, பருவம் பார்த்து பயிர் சாகுபடி என அனைத்திற்கும் நேரம் காலம் பார்த்து சிறப்பாக செய்து வருகிறோம். உலகம் முழுவதும் ஹிந்து மதம் வளர்ந்துள்ளது. சமண மதத்திற்கு மாறிய பாண்டிய மன்னனை, ஞான சம்மந்தர் திரும்பவும் தாய் மதத்திற்கு அழைத்து வந்தார். எனவே, மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஹிந்து மதம் சிறப்பான ஒன்று என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

இம்மாநாட்டில், கிராமக்கோவில் பூஜாரிகள் பாரம்பரியத்தை காக்க வேண்டும்; பரம்பரை நிலத்தை ஆக்கிரமிக்க கூடாது; பூஜாரிகளுக்கு தனி ஆணையம் அமைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு வி.எச்.பி.,மாநில பொது செயலாளர் சோமசுந்தரம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மத்திய அரசு சிறப்பு வக்கீல் மன்தராஜ், பா.ஜ.,நகர தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் குருசாமி, பொருளாளர் யோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement