dinamalar telegram
Advertisement

போதை பொருள் பறிமுதல் தப்பிய ஒருவருக்கு வலை

Share


கூடலுார் : நீலகிரி மாவட்டம் கக்கனல்லா சோதனை சாவடியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரை, சோதனைக்கு நிறுத்திய போது, அதில் இருந்தவர் காரை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பி ஓடி மறைந்தார்.போலீசார் காரை சோதனை செய்ததில், அதனுள், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம்பேட் எமைன்) என்ற போதை பொருள், 100 கிராம் கடத்தி வருவது தெரியவந்தது. காருடன் அதனை பறிமுதல் செய்த போலீசார், மேல் விசாரணைக்காக மசினகுடி போலீசில் ஒப்படைத்தனர். மசினகுடி போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement