dinamalar telegram
Advertisement

எல்லை தாண்டிய பாக்., ட்ரோன் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டம்

Share


ஜம்மு : சர்வதேச எல்லையைத் தாண்டி வந்த 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை, எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.


ஜம்மு - காஷ்மீரின் ஆர்னியா செக்டரில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, சர்வதேச எல்லையைத் தாண்டி நேற்று அதிகாலை 4:45 மணிக்கு, ட்ரோன் ஒன்று நம் நாட்டுக்குள் பறந்து வந்தது. எல்லையில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அதன் மீது துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். உடனே, அது பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பிச் சென்றது.

சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் நம் எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதையடுத்து, எல்லையை வீரர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement