தலைமையாசிரியை தற்கொலை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் பானு ஸ்ரீ கார்த்திகா, 42. திருமணமாகி விவாகரத்து பெற்றார். பின், குணசேகரன், 38 என்பவர், பானு ஸ்ரீ கார்த்திகாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த, 2014 ல் திருமணம் செய்தார். ஏழு வயதில் மகன் உள்ளார்.படியூரில் அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பானுஸ்ரீகார்த்திகா இருந்து வந்தார். நேற்று முன்தினம், திருச்செந்துாருக்கு சென்று விட்டு கணவர் வீடு திரும்பினார். பானு ஸ்ரீ கார்த்திகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!