சென்னை : அமராவதி, ஆழியாறு அணையில் இருந்து, நாளைமுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட, முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களின் பாசனப்பகுதிகளுக்கு, நாளை முதல், செப்., 28 வரை, 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஐந்து வாய்க்கால்கள் வழியே பாசனம் பெறும் நிலங்களுக்கு, நாளை முதல் அக்., 15 வரை, தொடர்ந்து 152 நாட்களுக்கு தணணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆனைமலை தாலுகாவில் உள்ள, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
சென்னை : அமராவதி, ஆழியாறு அணையில் இருந்து, நாளைமுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!