dinamalar telegram
Advertisement

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Share


திருச்சி : மண்ணச்சநல்லுார் அருகே, கொள்ளிடம் ஆற்றில் குளித்த பள்ளி மாணவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் புதுக்காலனியை சேர்ந்த ரவி மகன் சுதர்சன்,17; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்த இவர், நேற்று, நொச்சியம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில், நண்பர்களுடன் குளித்துள்ளார். ஆற்றில் குளித்த போது, ஆழமான பகுதிக்கு சென்ற சுதர்சன், திடீரென நீரில் மூழ்கினார்.சக நண்பர்கள் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர், ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் மண்ணச்சநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

.தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், ஆற்றில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.ஒரு மணி நேரம் தேடிய தீயணைப்பு துறையினர், மாணவன் சுதர்சனை சடலமாக மீட்டனர். சம்பவம் குறித்து, மண்ணச்சநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement