dinamalar telegram
Advertisement

பஞ்சாப் மருத்துவமனையில் தீ விபத்து: பொருட்கள் நாசம்

Share


அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அமிர்தசரஸ் நகரில் குருநானக் தேவ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று புறநோயாளிகள் பிரிவில் தீப்பற்றியது. இதய நோய் மற்றும் எக்ஸ்ரே பிரிவுகளுக்கும் தீ பரவியது. வார்டுகளில் இருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டில், மெத்தை, படுக்கை, எக்ஸ்ரே கருவிகள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.மாநில பொதுப்பணி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை உடனே துவக்க உத்தரவிட்டார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement