நாஞ்சில் சம்பத் தங்கிய விடுதியில் முற்றுகை
தஞ்சாவூர் : கும்பகோணத்தில், நாஞ்சில் சம்பத் தங்கியிருந்த தனியார் விடுதியை முற்றுகையிட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் ஏப்., 17ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, நாஞ்சில் சம்பத் ஒருமையில் பேசினார். கும்பகோணத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நாஞ்சில் சம்பத், காசிராமன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.தகவலறிந்த பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர், நாஞ்சில் சம்பத் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., அசோகன் தலைமையிலான கிழக்கு போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!