டில்லி தீ விபத்து : முதல்வர் இரங்கல்
சென்னை : டில்லி தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'டில்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது, மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்' என்று, தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும், இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!