இடதுசாரிகள் தனி ஆவர்த்தனம்?
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சி, டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பிஉள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அறிக்கையில், 'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், மக்களிடையே தி.மு.க.,விற்கு எதிரான போக்கு காணப்படுகிறது.

ஊழல் புகார்களும் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அதோடு சட்டம் - ஒழுங்கு நிலையும் மோசமாக உள்ளது. 'குறிப்பாக, 'லாக் -அப்' சாவுகள் அதிகமாகி விட்டன' என சொல்லப்பட்டு உள்ளதாம்.இந்த அறிக்கையைப் படித்ததும், தமிழகத்தில் தங்கள் கட்சியினர் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து கொண்டாராம் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி. உடனே அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டாராம்.

தமிழக மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றி ஸ்டாலினிடம் சொன்னாராம். நீங்கள் சொன்னவற்றை நிச்சயம் கவனிக்கிறேன் என, ஸ்டாலின் பதில் அளித்தாராம். மக்களுக்கு எதிரான நடவடிக்கை களை கடுமையாக விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., சீனியர் தலைவர்கள் தி.மு.க., அரசு விஷயத்தில் வாய் மூடி மவுனமாக இருக்கின்றனர்.
இப்படி இருந்தால் மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்த அறிக்கையை, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ தலைவர்கள், மத்திய தலைமைக்கு அனுப்பி வைத்தனராம். ஆனால், யெச்சூரியோ ஒரு போன் போட்டு விவகாரத்தை மூடிவிட்டார்.

வாசகர் கருத்து (13)
கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் முதலாளிக்கு இந்த விசுவாசம் கூடவா காட்டக்கூடாது - எச்ச சோறு மைண்ட் வாய்ஸ்
கேடுகெட்ட புரூடா விடியல் என்றாலே கட்டிங் கமிஷன் கரப்ஷன் தானே
கேக்கலே,, இன்னும் கதறல் சப்தம் அதிகமாக்கினால்தான் தமிழ்நாடு சரியான பாதையில் பயணிக்கிறதென்ற அர்த்தம்
லோக் சபா கூட்டணிக்கு ரொம்ப துட்டு எதிர்பார்க்கிறார் சீதாராம் யெச்சூரி
என்னாச்சு யெச்சூரி அடையாளம் தெரியாம மாறிட்டார்
திருட்டு உருட்டு கூட்டம். தேயிலை வட சாப்பிட 40 கோடி வாங்கின கேடு கேட்ட பயலுக இப்போ SILENT MODE ல இருக்கானுங்க.