அச்சகங்கள் முழு அடைப்பு
சிதம்பரம் : காகிதம், மை உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சிதம்பரத்தில் அச்சகங்கள் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.அச்சகங்களில் பயன்படுத்தும் காகிதம், அட்டை மற்றும் மை உள்ளிட்ட இடுபொருட்கள் விலை கடந்த ஒரு மாதத்தில் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
பிரிண்டிங் காகிதம் உள்ளிட்ட இடுபொருட்கள் மீது 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு அச்சக உரிமையாளர் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் கடலுாரில் அச்சகங்களை முழு நாள் மூடி போராட்டம் நடத்தினர்.அதைத்தொடர்ந்து, சிதம்பரம் அச்சக உரிமையாளர் சங்கம் சார்பில் அச்சகங்கள் மூடி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சிதம்பரத்தில் உள்ள அச்சகங்கள் மூடப்பட்டு இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!