கடலுார் : பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்த முகாமை, கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் முன்னிலை வகித்தார்.
பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு ஆகியோர் பேசினர்.கடலுார், சிதம்பரம், பண்ருட்டி உட்பட 7 தாலுகாக்களில் உள்ள 600 நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் பொதுமக்களிடம் பணிவாக நடந்து கொள்வது குறித்தும், தரமான பொருட்கள் விநியோகம் செய்வது குறித்தும் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அருள், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், பேராசிரியர் சுகுணா, ஆசிரியர் ஆறுமுகம், நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் துரைசாமி நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!