dinamalar telegram
Advertisement

சிங்கிரிகுடி கோவிலில்இன்று தேரோட்டம்

Share


கடலுார் : சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவம், கடந்த 7 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.தினமும் காலை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 11ம் தேதி கருட சேவையும், 14ம் தேதி வெண்ணைத்தாழி அலங்காரத்தில் சாமி வீதியுலாவும் நடந்தது.முக்கிய விழாவான தேரோட்டம் இன்று (15ம் தேதி) நடக்கிறது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement