வீடு புகுந்து திருட்டு கடலூரில் துணிகரம்
கடலுார் : கடலுாரில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து திருடப்பட்ட துணிகர சம்பவம் நடந்தது.கடலுார் அருகே தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. மீனவரான இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சோனியா மட்டும் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மிக்சி, டி.வி., உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது. புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!