பொது விநியோக திட்ட குறை தீர் முகாம்
வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் கிராமத்தில் பொது விநியோக திட்ட குறை தீர் முகாம் நடந்தது.வழங்கல் அலுவலர் ரோகிணிராஜ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சுதாகர், வட்ட பொறியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புதிய ரேஷன் அட்டை,பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மற்றும் கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட அனைத்து மனுக்களும் உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!