பெண்ணை தாக்கியதம்பதிக்கு வலை
புவனகிரி : மருதுார் அருகே பெண்ணை தாக்கிய கணவன் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி அடுத்த அம்பாள்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ராஜ்குமார். இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் மகன் கோவிந்தராஜிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராஜ்குமாரின் தாய் வெள்ளையம்மாள்,57; அங்குள்ள பால்சொசைட்டியில் பால் ஊற்ற சென்றார்.அங்கு வந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வெள்ளையம்மாளை ஆபாசமாக திட்டி, தாக்கினர். காயமடைந்த வெள்ளயைம்மாள் புவனகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தராஜ், உஷாவை தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!