பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்நெடுஞ்சாலை அதிகாரி ஆய்வு
பெண்ணாடம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக பெண்ணாடம் ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த இரும்பு பிளேட்டை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு செய்தார்.விருத்தாசலம் - ராமநத்தம் மார்க்கத்தில், பெண்ணாடம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
பெ.பொன்னேரியில் உள்ள ரயில்வே கேட்டை ரயில்கள் வரும் போது மூடுவதால் போக்குவரத்து பாதித்தது. இதனால் கடந்த 2010ல் ரூ. 23 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த 2016ல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பராமரிப்பின்றி உள்ள மேம்பாலத்தின் சிமென்ட் சிலாப்பை இணைக்கும் இரும்பு பிளேட்டுகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
இதனால் வாகனங்கள் செல்லும்போது பிளேட்டுகள் வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை சுட்டிக்காட்டி,'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை திட்டக்குடி உட்கோட்ட இளநிலை பொறியாளர் ராமலிங்கம் மேம்பாலத்தில் இரும்பு பிளேட்டுகள் சேதமடைந்துள்ளதை ஆய்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!