கடலுார் : துராந்தகத்தில் பஸ் கண்டக்டர் கொலை சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க கோரியும் கடலுாரில் பஸ் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னையில் இருந்து நேற்று அதிகாலை விழுப்புரம் நோக்கி அரசு பஸ் வந்தது. மேல்மருவத்தூர் அருகே மதுராந்தகம் என்ற இடத்தில் வந்தபோது, பயணி ஒருவரிடம் கண்டக்டர் பெருமாள், 56: டிக்கெட் கேட்டுள்ளார். போதையில் இருந்த அந்த பயணி, பெருமாளை தாக்கியதில் அவர் இறந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து கடலுார் அரசு போக்குவரத்து பணிமனை (விழுப்புரம் கோட்டம்) முன்பு, சி.ஐ.டி.யூ., பாஸ்கரன், எம்.எல்.எப்., மணிமாறன், ஏ.ஏ.எல்.எல்.எப்., கருணாநிதி, பாட்டாளி தொழிற்சங்க ராஜமூர்த்தி தலைமையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திரண்டு, கடலுார் - சிதம்பரம் சாலையி்ல் மறியலில் ஈடுபட்டனர்.கண்டக்டர் பெருமாளை கொலை செய்த குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து மறியலை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால், கடலுார் - சிதம்பரம் சாலையில் பகல் 12:15 முதல் 12:35 மணி வரை போக்குவரத்து பாதித்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!