குடிமைப்பொருள் சிறப்பு முகாம்
புவனகிரி : சிதம்பரம் வட்ட குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில், கீரப்பாளையத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.கீரப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு குடிமைப்பொருள் தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் தாலுகா கிராமங்களைச் சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்று புதிய ரேஷன் அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், கடைமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.வருவாய் ஆய்வாளர் முகம்மது ரியாஸ் உள்ளிட்டவர்கள் முகாமில் பங்கேற்ற பொது மக்களின் விண்ணப்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் தவிர்த்து, இதர சேவையை உடனுக்குடன் மேற்கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!