கூட்டுறவு வங்கி இயக்குனர்கலெக்டரிடம் புகார் மனு
விழுப்புரம், : விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் தனுசு, கலெக்டரிடம் அளித்துள்ள மனு:விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 7ம் தேதி, நிர்வாகக் குழு கூட்டம் நடந்த போது தலைவர் தங்க சேகர், கடந்த 8 ஆண்டுகளாக வங்கி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளதாக கூறி வெளிநடப்பு செய்தார்.
அந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் வரவில்லை.இதனால் வங்கியின் நலன் கருதியும், வாடிக்கையாளர்கள் நலன் கருதியும் கூட்டத்திற்கு வந்த இயக்குனர்களின் ஆதரவோடு என்னை தற்காலிக தலைவராக தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வங்கி மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர் ஆகியோர் அனுமதியோடும், பெரும்பான்மை இயக்குனர் ஒப்புதலோடும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தங்க சேகர் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தை செல்லாத வகையில் ரத்து செய்ய வேண்டும். பெரும்பான்மை இயக்குனர்கள் எனக்கு ஆதரவாக உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை நடைமுறைபடுத்தி வாடிக்கையாளர்கள் 2.50 கோடி ரூபாய் கடன் பெற ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!