துபாய் விமான பயணியிடம் ரூ.1.44 கோடி தங்கம் பறிமுதல்
பெங்களூரு : விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் 1.44 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணியரை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.அதில், ஒரு பயணி இரண்டு பொட்டலங்களில் 2.84 கிலோ எடையுள்ள தங்கத்தை பெட்டிக்குள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.44 கோடி ரூபாய் மதிப்பு என்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!