முதியவர் துாக்குபோட்டு தற்கொலை
மரக்காணம்-கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடியில் வலிப்பு நோய் பிரச்னையால் முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்தவர் ரவி, 55; கூலித் தொழிலாளி. இவர், சில மாதங்களாக வலிப்பு நோயால் அவதியடைந்து வந்தார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!