வி.ஏ.ஓ., அலுவலகம் திறப்பு
புதுச்சேரி : சோரப்பட்டில் கொம்யூன் பஞ்சாயத்து கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை அங்காளன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.சோரப்பட்டில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., விடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் திறந்து வைத்தார்.சப் கலெக்டர் ரிஷிதா குப்தா, வில்லியனுார் தாசில்தார் கார்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!