கள்ளச்சாராயம் விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி,-தெங்கியாநத்தம் கிராமத்தில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை முன்னிலை வகித்தார். சின்னசேலம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது குற்றம். அவ்வாறு ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!