மே இறுதியில் பருவமழை வானிலை மையம் தகவல்
பெங்களூரு : இந்த முறை முன் கூட்டியே மே இறுதியில் கர்நாடகாவில் பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் அசானி புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.இந்நிலையில், இம்மாத இறுதியில் முன்கூட்டியே பருவமழை துவங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் வழக்கமாக ஜூன் ஒன்று அல்லது முதல் வாரத்தில் பருவமழை துவங்கும். இம்முறை இம்மாதம் 27ல் துவங்குகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் ஆரம்பிக்கும் மழை பின் படிப்படியாக வடக்கு பகுதியை நோக்கி செல்லும். இந்த முறை நல்ல மழை பெய்யும் என இந்திய வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!