புரிந்துணர்வு ஒப்பந்தம்
விழுப்புரம்,-விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மலேஷியா பல்கலைக் கழகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, மலேஷியா பீடோங் மாகாணத்தில் உள்ள மருத்துவ ஆசிய நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தோடு ஏ.ஐ.எம்.எஸ்.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் அகிலா வரவேற்றார். ஆராய்ச்சிப்புல முதன்மையர் கலைமதி வாழ்த்திப் பேசினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் செந்தில்குமார், துணை பதிவாளர், மாணவியர் புல முதன்மையர், வணிகவியல் புல முதன்மையர், மாணவியர் பேரவை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பல்கலைக்கழக மருத்துவ பிரதிநிதி பிரிவு பேராசிரியர் பாலசுந்தரம், இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழும நிர்வாக தாளாளர் செந்தில்குமார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பரிமாறிக் கொண்டனர்.நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மருத்துவ பிரதிநிதி பிரிவு பேராசிரியர் பாலசுந்தரம், பல்கலைக்கழக வரலாறு, கல்வி செயல்பாடு, ஒப்பந்தம் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றி கூறினார்.துணை முதல்வர் செல்வி நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!