விழுப்புரம் - காட்பாடி இடையே ரயில்போக்குவரத்து வரும் 23ம் தேதி துவக்கம்
விழுப்புரம்,-விழுப்புரம் - காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து வரும் 23ம் தேதி துவங்குகிறது.கொரோனா ஊரடங்கையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சில பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்தாகியது. தொற்று படிப்படியாக குறைந்ததையொட்டி, ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ரயில்கள் சேவை மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.காட்பாடி - விழுப்புரம் பயணிகள் ரயிலை 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி, இந்த ரயில் போக்குவரத்து வரும் 23ம் தேதி முதல் துவங்குகிறது.அதன்படி, அன்று காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு விழுப்புரத்திற்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் வேலுார் டவுன், வேலுார் கண்டோன்மெண்ட், பெண்ணாத்துார், கனியம்பாடி, கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சேதராம்பட்டு, ஆரணி சாலை, மாதிரிமங்கலம், போளூர், அகரம்சிப்பந்தி, துறிஞ்சாபுரம், திருவண்ணாமலை, தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனுார், திருக்கோவிலுார், ஆயந்துார், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்தை காலை 9:10 மணிக்கு வந்தடைகிறது.இதே போல், மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து இரவு 7:05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் காட்பாடியை இரவு 11:05 மணிக்கு சென்றடைகிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!