விவசாயிகளிடம் பணம் வசூல்தொகுப்பூதிய ஊழியர் டிஸ்மிஸ்
விழுப்புரம்,-செஞ்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலித்த தொகுப்பூதிய ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தொகுப்பூதிய ஊழியரான பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன், விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.இதையடுத்து, அலு வலர்கள் கொண்ட குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். அதில், புகார் உறுதியானதைத் தொடர்ந்து, பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரனை பணியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது.இது போன்ற தவறான செயல்களை மற்ற நெல் கொள்முதல் நிலையங்களில் யாராவது மேற்கொண்டால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!