கிரைம் கார்னர்
மின்சாரம் பாய்ந்து பசுக்கள் பலி
துமகூரு குப்பியின், கட்டி லே - அவுட்டில், நேற்று காலை விவசாயி ஒருவர், பசுக்களை மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், இரண்டு பசுக்கள் இறந்தன. உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஓட்டலில் தீ விபத்து
துமகூரு குப்பியில், தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ஓட்டலில், நேற்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. மளிகை பொருட்கள் உட்பட, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானது. தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
லாரி மோதி இருவர் பலி
சித்ரதுர்கா நாயகனஹட்டியின், மனமைனஹட்டி கிராமம் அருகில், நேற்று காலை சென்ற பைக் மீது லாரி மோதியது. பைக்கிலிருந்த குமார் நாயக், 38, மஹாந்தேஷ் நாயக், 45, உயிரிழந்தனர்.
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
ஹாவேரி ராணி பென்னுாரின், முஷ்கூரின் விவசாயி சென்னபசப்பா சிதப்ப ஹிரேமொரபதா, 38, நேற்று முன் தினம் மாலை, வயலில் பணியாற்றினார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், அவர் உயிரிழந்தார்.
பெண் தற்கொலை
தட்சிண கன்னடா பண்ட்வாலின், கல்லட்கா கிராமத்தில் வசித்த மல்லிகா, 32, சில ஆண்டுகளாக மன நோயால் அவதிப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை, இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!