70 கடைகள் அகற்றம்
கோயம்பேடு : சாலையோரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 70 கடைகள் அகற்றப்பட்டன.சென்னை, கோயம்பேடு நுாறடி சாலையில் அமைக்கப்படும் ஆக்கிரமிப்பு கடைகள், அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. இந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால், கோயம்பேடு சந்தைக்குள் காய்கறி லோடு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று, மார்க்கெட் அங்காடி குழுவினர், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த 70 கடைகளை அகற்றினர். மேலும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!