நடுரோட்டில் பெண் வக்கீல் மீதுதாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
பாகல்கோட் : பெண் வழக்கறிஞரும், அவரது கணவரும் நடுரோட்டில் தாக்கப்பட்டனர்.பாகல்கோட்டில் உள்ள விநாயகா நகரை சேர்ந்தவர் சங்கீதா சிக்கேரி, 40. இவர் வழக்கறிஞர். வினாயகா நகர் கிராஸ் என்ற இடத்தில் இவரும், இவரது கணவரும் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அவர்கள் மீது, அப்பகுதியை சேர்ந்த மகாந்தேஷ், 45 என்பவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாகல்கோட் போலீசில் வழக்கறிஞர் புகார் செய்துள்ளார்.அதில், ''பா.ஜ., பிரமுகர் ராஜு நாயக்கர் என்பவரின் துாண்டுதலின் பேரில், மகாந்தேஷ் தாக்குதல் நடத்தினார். இம்மாதம் 8ல் பா.ஜ.,பிரமுகர், என்னை தாக்கினார். என் வீட்டின் சுற்றுச்சுவர், கழிவறையை இடித்து தள்ளினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, கூறி உள்ளார்.இது தொடர்பாக மகாந்தேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான வீடு சம்பந்தப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக இவருக்கும், பெண் வழக்கறிஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!