ஒரு நாள் தாலுகா அலுவலகம்கலெக்டர்களுக்கு புது டூட்டி
தாவணகரே : ''வாரத்தில் ஒருநாள், மாவட்ட கலெக்டர்கள், தாலுகா அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும்,'' என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.தாவணகரேவில், அவர் நேற்று கூறியதாவது:வாரத்தில் ஒரு நாள், மாவட்ட கலெக்டர்கள், தாலுகா அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். இது குறித்து, வரும் வாரம் அதிகாரப்பூர்வமாக, உத்தரவு வெளியிடப்படும்.கிராம கணக்காளர்கள் பதவியின் பெயரை, 'கிராம செயல் நிர்வாக அதிகாரி' என மாற்றும்படி கோரிக்கை வந்துள்ளது. இதுபற்றி முதல்வருடன் ஆலோசித்து, முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!