dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்

Share
பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கொலைகன்னிவாடி: கசவனம்பட்டி கூலி தொழிலாளி ஆனந்தபாண்டி 42. நேற்று முன்தினம் இதே ஊரை சேர்ந்த உறவினர் மணிகண்டன் வீட்டிற்கு ஆனந்தபாண்டி சென்றார். சற்று நேரத்தில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. கன்னிவாடி போலீசார் உடலை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மணிகண்டன் 40, அவரது மனைவி கருமணி செல்வி 36, ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், கருமணிசெல்விக்கு ஆனந்தபாண்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதால், தம்பதியர் ஆனந்தபாண்டியை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக,' போலீசார் தெரிவித்தனர்.வேட்டி தடுக்கி விழுந்தவர் பலிவடமதுரை: திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பூ வியாபாரி அசோக்குமார் 45. மே 7ல் மது போதையில் பில்லமநாயக்கன்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் நடந்து சென்றார். கட்டியிருந்த வேட்டி தடுக்கிவிட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி விசாரிக்கிறார்.லேப்டாப் திருடியவர் கைதுதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் உணவகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து மூன்று லேட்டாப்பை திருடிய, திருச்சி ராம் ஜி நகரை சேர்ந்த தினேஷ் குமாரை 27, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், எஸ்.ஐ., ரவிசங்கர் தினேஷ் கைது செய்து,லேப் டாப்பை பறிமுதல் செய்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement