கர்நாடக அமைச்சரவை மாற்றம்; உரிய நேரத்தில் முதல்வர் முடிவு
மல்லேஸ்வரம் : ''கர்நாடக அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மை, உரிய நேரத்தில் முடிவு செய்வார்,'' என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண் சிங் தெரிவித்தார்.பா.ஜ., பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அக்கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்தார்.மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் அவர் நேற்று கூறியதாவது:
ராஜ்யசபா, எம்.எல்.சி., தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்த உத்தேச பட்டியல், கட்சியின் மத்திய பார்லிமென்ட் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அக்குழு ஆலோசித்து வேட்பாளர்களை இறுதி செய்து, அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மை, உரிய நேரத்தில் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வில் தலைமை குறித்து எந்த குளறுபடியும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!